உலக நாடுகளின் பெண்களுக்கு அனைத்து சீன மகளிர் சம்மேளனத்தின் வாழ்த்து
2023-03-08 10:34:45

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஹாங்காங், மக்காவ் மற்றும் தைவானின் பெண்கள் சங்கம், சீனாவுக்கான  170க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதரகங்கள், சீனாவிலுள்ள சர்வதேச அமைப்புகளின் நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கும்  தனிநபர்களுக்கும் அனைத்து சீன மகளிர் சம்மேளனம் அருமையான வாழ்த்துக்களைத் தெரிவித்தது.

பல்வேறு நாடுகளின் பெண்களுடன் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, ஒத்துழைப்பை ஆழமாக்கி, மனித குலத்துக்கான பொது எதிர்காலத்தை உருவாக்குவதை முன்னேற்றுவதற்கும், மேலும் அருமையான உலகத்தைக் கூட்டாகக் கட்டியமைத்து அனுபவிப்பதற்கும் பங்காற்ற சீனா விரும்புகின்றது என்று அனைத்து சீன மகளிர் சம்மேளனம் தெரிவித்தது.