பொலிவுறு மின்சாரப் பரிமாற்ற முறைமை பற்றிய அறிக்கை
2023-03-08 10:25:27

நாட்டில் நவீன மற்றும் பொலிவுறு மின்சாரப் பரிமாற்ற முறைமையை உருவாக்க தனது பணிக்குழு வழங்கிய அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக இந்திய மின்துறை அமைச்சகம் செவ்வாய் அன்று கூறியது.

கடந்த வாரம் மின்துறை அமைச்சர் ஆர். கே. சிங் தலைமையிலான பரிசோதனைக்குப் பிறகு இவ்வறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

முழுமையாகத் தானியங்கி, எண்முறை கட்டுப்பாட்டில் விரைவாகப் பதிலளிப்பதுடன், இணையத் தாக்குதல் மற்றும் இயற்கை சீற்றத்தைத் தடுக்கக் கூடிய மின் இணைத்தொகுதி தற்போது தேவைப்படுகிறது. மக்களுக்கு நாள்முழுவதும் நம்பத்தக்க மலிவான மின்னாற்றலை அரசு வழங்கும் இலக்கை நிறைவேற்றுவதற்கும் இது மிகவும் முக்கியம் என்று அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும், குறுகிய மற்றும் இடைகால பரிந்துரைகள் 1 முதல் 3 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும். நீண்டகால நடவடிக்கைகள் 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.