சீன எல்லையைக் கடக்கும் மக்களின் எண்ணிக்கை பெரிதும் அதிகரிப்பு: நிர்வாகம்
2023-03-08 14:55:54

சீனத் தேசிய குடிவரவு நிர்வாகம் வழங்கிய செய்தியின்படி, ஜனவரி 8ஆம் நாள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைச் சீராக்கிய பிறகு, வெளிநாடுகளுடனான பயணியர் போக்குவரத்து அதிகரிப்பு, ஹாங்காங் மற்றும் மக்கௌவுடனான மக்கள் பரிமாற்றம் மீட்சி ஆகியவற்றுடன், சீனாவின் எல்லையைக் கடக்கும் மக்களின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்து வருகின்றது.

மார்ச் 7ஆம் நாள் வரை, மொத்தம் 3 கோடியே 97 இலட்சத்து 22 ஆயிரம் பேர் எல்லைப்புறத்தில் பரிசோதிக்கப்பட்டனர். 24 இலட்சத்து 87 ஆயிரம் போக்குவரத்து வசதிகள் எல்லையைக் கடந்து சென்றன. இவை கடந்த ஆண்டின் அதே காலத்தை விட முறையே 112.4 மற்றும் 59.3 விழுக்காடு அதிகம். தவிரவும், இக்காலத்தில் 33 இலட்சத்து 62 ஆயிரம் கடவுச்சீட்டுகள், வெளிநாட்டவர்களுக்கான ஒரு இலட்சத்து 22 ஆயிரம் நுழைவிசைவுகள் மற்றும் குடியிருப்பு அனுமதிகள் முதலியவை வழங்கப்பட்டன.