அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வை விரைவுப்படுத்தும்
2023-03-08 20:15:30

வங்கி வட்டி விதிகத்தை எதிர்பார்த்ததை விட மேலும் உயர்ந்த நிலைக்கு அதிகரிக்கும் விதமாக அமெரிக்க ரிசர்வ் வங்கி விரைவாக செயல்படக் கூடும் என்று அமெரிக்க ரிசர்வு வங்கி தலைவர் பவல் 7ஆம் நாள் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த ஆண்டில், நாணயக் கொள்கை கடுமையாக்கும் விதம் ரிசர்வு வங்கி வலுவான நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் தற்போதுவரை, பயன்முழுமையாக காண முடியவில்லை. அமெரிக்காவில் பணவீக்கம் 2022ஆம் ஆண்டின் நடுபகுதி தொடங்கி குறைந்து வந்தபோதிலும், இன்னும் அதிகமாகவே உள்ளது என்று தெரிவித்தார்.

கடந்த மார்ச் முதல், அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மொத்தமாக 450 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இருப்பினும், அந்நாட்டின் பணவீக்கம் இன்னும் உயர்ந்த நிலையில் இருக்கிறது.