அமெரிக்காவுக்கு பணவீக்கத்தின் அழுத்தம் இன்னும் உண்டு
2023-03-09 16:16:00

அமெரிக்கப் பொருளாதார செயல்பாடுகள் சிறிய அளவில் அதிகரித்துள்ளன. ஆனால் பணவீக்கத்தின் அழுத்தம் இன்னும் பரவலாக நிலவுகிறது என்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் குழு 8ஆம் நாள் வெளியிட்ட தேசிய பொருளாதார நிலைமை பற்றிய ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் கூட்டத்துக்கான முக்கிய ஆதாரமாகும். அடுத்த நாணய கொள்கைக் கூட்டம் மார்ச் 21, 22ஆம் நாட்களில் நடைபெற உள்ளது.