67 நாட்களில் 2000கோடி விரைவு டெலிவரிகள்
2023-03-09 16:13:55

சீனாவில் மார்ச் 8ஆம் நாள் வரை  விரைவு டெலிவரி மூலம் அனுப்பப்பட்ட பொதிகளின் எண்ணிக்கை இவ்வாண்டில் 2009கோடியை எட்டியுள்ளதாக தேசிய அஞ்சல் பணியகம் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டில், நாட்டில் 1000கோடி விரைவு டெலிவரி பொதிகளை அனுப்புவதற்கு 39 நாட்கள் மட்டுமே தேவைப்பட்டன. தொடர்ந்து, மேலும் 1000கோடி எண்ணிக்கையை எட்டுவதற்கு 28 நாட்கள் மட்டுமே தேவைப்பட்டது. விரைவு டெலிவரி துறையின் வலுவான உயிராற்றலை இது காட்டுகின்றது.