உக்ரைன் அணு வசதியின் பாதுகாப்புக்கு சீனாவின் உதவி
2023-03-09 14:28:14

சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் ஆளுநர் குழு கூட்டம் மார்ச் 6ஆம் நாள் நடைபெற்றது.  வியன்னாவிலுள்ள ஐ.நா அலுவலகத்துக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி லி சுங் இதில் கலந்து கொண்டு பேசுகையில், உக்ரைன் அணு வசதியின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் விதம், சீனா 2 இலட்சம் யூரோவை  நன்கொடையாக வழங்கும் என்றார்.

இதுபற்றி, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 8ஆம் நாள் கூறுகையில்,

உக்ரைன் அணு வசதி பாதுகாப்பை வலுப்படுத்த சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் மேற்கொண்ட முயற்சிக்கு சீனா உண்மையான நடவடிக்கைகளின் மேலும் ஆதரவு அளிக்கின்றது என்றார். அதோடு, சர்வதேச சமூகத்துடன் இணைந்து, நியாயம், ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி பெறக் கூடிய சர்வதேச அணு சக்தி பாதுகாப்பு அமைப்பு முறையின் உருவாக்கத்தை சீனா தொடர்ந்து முன்னேற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.