சீனாவில் உயிரின நாகரிகக் கட்டுமானத்துக்கு ஐ.நாவின் முன்னாள் இயக்குநர் பாராட்டு
2023-03-09 11:50:51

ஐ.நாவின் சுற்றுச்சூழல் திட்டப் பணியகத்தைச் சேர்ந்த உயிரின பல்வகைமை ஒப்பந்தத்துக்கான செயலகத்தின் முன்னாள் இயக்குநர் ஆலிவர் ஹில்லர் அண்மையில் கூறுகையில், ஐ.நாவில் பணி புரிந்த போது, சீனாவில் பலமுறை பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், தரமிக்க வளர்ச்சியை மேம்படுத்த கடந்த சில ஆண்டுகளில் சீனா மேற்கொண்ட நடைமுறை நடவடிக்கைகளை நேரில் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் உயிரின நாகரிகக் கட்டுமானம் பற்றிய சீனாவின் அனுபவம் உலகத்துடன் பகிர்ந்து கொள்ளத்தக்கது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.