பிப்ரவரியில் சீனாவில் விலைவாசி நிலைமை நிதானம்
2023-03-09 14:41:21

சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 9ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, பிப்ரவரியில், தொழிற்துறையின் உற்பத்தி மீட்சி வேகம் விரைவடைந்ததுடன், சந்தைத் தேவையும் மேம்பட்டு வந்துள்ளது.

ஜனவரியில் இருந்ததை விட பிப்ரவரியில், நுகர்வு விலை குறியீட்டின் அதிகரிப்புப் போக்கு தணிவடைந்தது. உற்பத்தியாளர் விலைக் குறியீடு ஜனவரியை விட குறைந்துள்ளது.

இவ்வாண்டின் துவக்கம் முதல், விலைவாசி நிலைமை நிதானமாக உள்ளது. இது முழு பொருளாதார விருத்தியைத் தூண்டுவதற்குத் தகுந்த விலைவாசிச் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என்று தொடர்புடைய நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.