நேபாளத்தின் புதிய அரசுத் தலைவரானார் ராம் சந்திர பௌடல்
2023-03-10 10:50:54

நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராம் சந்திர பௌடல், மார்ச் 9ஆம் நாள் அந்நாட்டின் 3வது அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தொடர்பான தேர்தலில் பதிவான 52628 வாக்குகளில் அவர் 33802 வாக்குகளை வென்று, நேபாளத்தின் ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் தலைவர் சுபாஷ் சந்திர நெம்பங்கைத் தோற்கடித்தார்.

அந்நாட்டின் பிரதிநிதிகள் அவை, நாடாளுமன்றம், 7 மாநிலங்களின் அவைகள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம் சந்திர பௌடலின் தற்போது வயது 78. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுபாஷ் சந்திர நெம்பங் தனது சொந்த கட்சியின் ஆதரவை மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.