அமெரிக்காவின் பயணியர் கப்பலில் நோரோ வைரஸ் பரவல்
2023-03-10 18:42:49

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்துக்கும் மெக்சிகோவுக்கும் இடையே இயங்கி வரும் பயணியர் கப்பல் ஒன்றில், 300க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு அறிகுறிகள் ஏற்பட்டதாக அமெரிக்க தொற்று நோய் கட்டுபாடு மற்றும் தடுப்பு மையம் 8ஆம் நாள் தெரிவித்தது. இப்பயணியர் கப்பலின் உரிமையைக் கொண்ட அமெரிக்க இளவரசி பயணிகள் கப்பல் நிறுவனம் இது குறித்து வெளியிட்ட செய்தியில், அவர்கள் மிகுதியாகப் பரவும் நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டிருக்க சாத்தியம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.