கிரிப்டோ நாணயங்கள் மீதான பண மோசடி தடுப்பு நடவடிக்கை:இந்தியா
2023-03-10 10:37:54

டிஜிட்டல் சொத்துக்களின் மீதான கண்காணிப்பை வலுப்படுத்தும் வகையில், கிரிப்டோ நாணயங்கள் மற்றும் மெய்நிகர் சொத்துத் துறை சார்ந்த பண மோசடி தடுப்பு நடவடிக்கைகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கிரிப்டோ வர்த்தகம், பத்திரமாக வைத்தல் மற்றும் தொடர்புடைய நிதிச்சேவைத் துறைக்குப் பண மோசடி தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய மத்திய நிதி அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டிஜிட்டல் சொத்துக்கள், கிரிப்டோ மற்றும் மெய்நிகர் சொத்து வணிகம் 2002 பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் செயல்படும்.

தவிரவும், கிரிப்டோ பரிமாற்ற நிலையங்கள் சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகளை இந்திய நிதி புலனாய்வு அமைப்புக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.