ஷிச்சின்பிங்கிற்கு ரஷிய அரசுத் தலைவர் புதின் வாழ்த்து
2023-03-10 18:52:12

சீன மக்கள் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷிச்சின்பிங்கிற்கு ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் 10ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.

சீனப் பொருளாதாரச் சமூக வளர்ச்சியை முன்னேற்றுவது, சர்வதேச அரங்கில் சீனாவின் நலன்களைப் பேணிக்காப்பது குறித்து ஷிச்சின்பிங் வகுத்துள்ள கோட்பாடுகள், சீன மக்களிடையே மிக பரந்த அளவிலான ஆதரவு பெற்றுள்ளது என்று வாழ்த்து செய்தியில் புதின் தெரிவித்தார்.

கூட்டு முயற்சியுடன், ரஷியா – சீனா இடையே பல்வேறு துறைசார்ந்த ஒத்துழைப்புகளில் அதிக சாதனைகள் படைக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்த புதின், சீன மக்களுக்கு நன்மை செய்யும் பணியில் ஷிச்சின்பிங் புதிய சாதனைகளைப் பெறவும் வாழ்த்து தெரிவத்தார்.