சீனாவில் முழு நடைமுறையிலான மக்கள் ஜனநாயகத்தின் வளர்ச்சி
2023-03-10 10:25:08

நடப்பாண்டில், சட்டமியற்றல் சட்டத்தின் வரைவுத் திருத்தம், தேசிய மக்கள் பேரவையால் பரிசீலனைக்காக மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. இந்த வரைவுத் திருத்தத்தில் முழுமையான நடைமுறையில் மக்கள் ஜனநாயகத்தை வளர்ப்பது என்பது சேர்க்கப்பட்டது. இந்த ஜனநாயக மாதிரி, தேர்தல் ஜனநாயகத்தை கலந்தாலோசனை ஜனநாயகத்துடன் இணைத்து, ஜனநாயக தேர்தல்கள், ஜனநாயக ஆலோசனை, ஜனநாயகக் கொள்கை முடிவு, ஜனநாயக மேலாண்மை, ஜனநாயக  கண்காணிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கின்றது. இதன் மூலம் தேசிய அரசியல் வாழ்க்கை மற்றும் சமூக வாழ்க்கையின் முழுப் போக்கில் மக்களின் விருப்பங்கள் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன.

ஜனநாயகம் என்பது ஓர் அலங்காரப் பொருள் அல்ல. அது, மக்களின்  பிரச்சினைகளைத் தீர்க்கச் செயல்பட வேண்டும். சீனா பெற்றுள்ள சமூகப் பொருளாதாரச் சாதனைகள், முழு நடைமுறையிலான மக்கள் ஜனநாயக வளர்ச்சியிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை. சர்வதேச அதிகார நிறுவனங்கள் வெளியிட்ட பொது மக்கள் கருத்து கணிப்பின் படி, கடந்த சில ஆண்டுகளில் சீன அரசின் மீதான சீன மக்களின் திருப்தி ஆண்டுதோறும் 90 சதவீதத்துக்கு மேல் நிலைநிறுத்தப்படுகின்றது. இது சீன ஜனநாயக உயிர்ச்சக்தியின் உண்மையான பிரதிபலிப்பாகும்.