கோடையில் மின்சாரம் கிடைப்பதை உறுதிசெய்ய மின் நிறுவனங்களுக்கு இந்திய அரசு வலியுறுத்தல்!
2023-03-10 10:00:27

வரவிருக்கும் கோடை மாதங்களில், போதுமான அளவு மின்சாரம் கிடைப்பதை உறுதிசெய்ய, பல முனை உத்திகளை வகுத்துள்ளதாக இந்தியாவின் மத்திய மின் அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் மின்வெட்டு இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு, மின் துறை நிறுவனங்களுக்கு மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் உத்தரவிட்டுள்ளார்.

ஆர்.கே.சிங் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மின்துறை அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் பல்வேறு மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், அதிக மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன.

மத்திய மின்சார ஆணையத்தின் மதிப்பீட்டின்படி, ஏப்ரல் மாதத்தில் உச்ச மின் தேவை 229 ஜிகாவாட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.