சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டத்தொடர் நிறைவு
2023-03-11 18:04:24

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டத்தொடர் மார்ச் 11ஆம் நாள் நிறைவுப் பெற்றது. ஷி ச்சின்பிங் உள்ளிட்ட நாட்டின் தலைவர்கள் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்ற இந்நிறைவுக் கூட்டத்தில் பங்கெடுத்தனர்.

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் தலைவர் வாங் ஹுநிங் இக்கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கி உரை நிகழ்த்தினார்.

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 13ஆவது தேசியக் கமிட்டியின்  நிரந்தரக் குழுவின் பணியறிக்கைக்கான தீர்மானம், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசியல் தீர்மானம் உள்ளிட்டவை இக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.