கனடாவில் உறைவிடப் பள்ளிகளின் வரலாறு அதிர்ச்சியானது:ஐ.நா. அதிகாரி
2023-03-11 18:09:13

ஆதிகுடிகளின் உரிமைகளுக்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் காலி சாய் கனடாவில் மேற்கொண்ட 10 நாட்கள் ஆய்வுப் பயணத்தை முடித்துக் கொண்டு, மார்ச் 10ஆம் நாள் அந்நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், கனடாவிலுள்ள உறைவிட பள்ளிகளில் உயிர் பிழைத்த ஆதிகுடிகளின் வாக்குமூலங்கள் அதிர்ச்சியானதாக உள்ளது. காலனித்துவத்தால் விட்டுச் செல்லப்பட்ட பாதிப்புகளை கனடா தீர்த்து, அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை நனவாக்கி, கடந்தகால குற்றத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், ஆதிகுடிகளுக்கான உறைவிட பள்ளிகளின் எதிர்மறை தாக்கம், தற்போதைய குழந்தை நல முறைமையில் பிரதிபலிக்கப்படுகிறது என்றும், தலைமுறைகளுக்கிடையில் இப்பள்ளிகள் மற்றும் கட்டமைப்பு சார் இனவெறி பாகுபாட்டால் ஏற்பட்ட மன வேதனை, மனித உரிமை மீறல் செயல்களை ஏற்படுத்தி வருகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.