சீனத் தலைமை அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு
2023-03-11 16:19:25

14ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடர் நிறைவுற்றதை அடுத்து, மார்ச் 13ஆம் நாள் காலை 10:30 மணிக்கு சீனத் தலைமை அமைச்சர் லீ ச்சியாங் மக்கள் மாமண்டபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பங்கெடுத்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க உள்ளார்.

இச்செய்தியாளர் சந்திப்பை சீன ஊடகக் குழுமம் நேரலையாக ஒளிபரப்பு செய்ய உள்ளது.