அணுக் கழிவு நீர் வெளியேற்றம் குறித்த ஜப்பான் மக்களின் எதிர்ப்பு
2023-03-11 16:45:40

ஜப்பானின் பொது மக்கள், 10ஆம் நாள், அந்நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் அமைச்சகத்திற்கு வெளியே, பேரணி ஒன்றை நடத்தி, ஜப்பான் அரசும் டோக்கியோ மின்னாற்றல் நிறுவனமும் அணுக் கழிவு நீரை கடலில் வெளியேற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜப்பானின் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் இப்பேரணியில் கலந்து கொண்டு கூறுகையில், அணு மின் நிலைய விபத்தின் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கு எதிரான அவசர நிலைமையும் நீக்கப்படவில்லை. உயர் அளவு கதிர்வீச்சுப் பொருட்கள் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். கழிவுநீரை கடலில் வெளியேற்ற கூடாது என்றார்.