சீன நிறுவனங்களின் மீதான அமெரிக்காவின் தடை நடவடிக்கைக்கு சீனா எதிர்ப்பு
2023-03-11 16:53:08

சீனாவின் பல நிறுவனங்களைக் குறிப்பிட்ட பட்டியலில் சேர்த்து, அவற்றின் மீது தடை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க நிதி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 10ஆம் நாள் கூறுகையில், அமெரிக்காவின் இச்செயலைச் சீனா உறுதியாக எதிர்ப்பதாகத் தெரிவித்தார். மேலும், அமெரிக்கா மேற்கொண்ட ஒருசார்புத் தடை நடவடிக்கைக்குச் சர்வதேசச் சட்டத்தின் ஆதாரம் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், அமெரிக்காவின் இச்செயல், சீன நிறுவனங்கள் மற்றும் தனிநபரின் சட்டப்பூர்வ உரிமை நலனையும், மற்ற நாடுகளுக்கிடையிலான இயல்பான வணிக மற்றும் வர்த்தகப் பரிமாற்றத்தையும் சீர்குலைத்து, உலகத்தில் தொழில் மற்றும் விநியோகச் சங்கிலிக்கு அச்சுறுத்தலாக அமைந்து, உலகப் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சியைத் தாமதப்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.