என்பிசி ஆண்டு கூட்டத் தொடரின் 5ஆவது முழு அமர்வில் ஷி ச்சின்பிங் பங்கேற்பு
2023-03-12 17:47:15

சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடரின் 5ஆவது முழு அமர்வு மார்ச் 12ஆம் நாள் காலை நடைபெற்றது. ஷி ச்சின்பிங் உள்பட தலைவர்கள் இதில் பங்கெடுத்தனர்.

இக்கூட்டத்தில் துணைத் தலைமை அமைச்சர்கள், அரசவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், மத்திய வங்கித் தலைவர், தலைமை தணிக்கையாளர், தலைமைச் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு தலைமை அமைச்சர் லீ ச்சியாங் பரிந்துரை செய்த வேட்பாளர்கள் பிரதிநிதிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.

இந்த அதிகாரிகளை நியமிப்பதற்கான உத்தரவில், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கையெழுத்திட்டார்.

மேலும், 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 8 சிறப்பு கமிட்டிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இக்கூட்டத்திலும் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.