சீனப் பொருளாதார வளர்ச்சி உலகிற்குப் பங்காற்றும்:சர்வதேச பிரமுகர்கள்
2023-03-12 16:48:46

நடப்பு ஆண்டிற்கான சீனாவின் இரு கூட்டத் தொடர்கள் சர்வதேச சமூகத்தின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. சீனாவின் பொருளாதார வளர்ச்சி, பிரதேச செழுமை மற்றும் உலகப் பொருளாதார மீட்சிக்குப் பங்காற்றும் என்றும், மக்களை மையமாகக் கொண்டு பொருளாதாரத்தை வளர்ச்சியுறச் செய்யும் சீனாவின் அனுபவங்கள் கற்றுக் கொள்ளத்தக்கவை என்றும் சர்வதேச பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கனடா கியூபெக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கூறுகையில், இரு கூட்டத் தொடர்கள் ஜனநாயகத்தன்மை வாய்ந்த போக்காகும். இக்கூட்டத்தில், பொருளாதாரம் பற்றிய திட்டங்கள், தொலைநோக்கு இலக்குகள் உள்ளிட்டவை குறித்து தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதிகள் விவாதம் நடத்துகின்றனர். பொது மக்களின் விருப்பப்படி பொருளாதாரத்தை வளர்த்து வரும் சீனா, உலகிற்கு ஊக்கமளித்துள்ளது என்று தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்க தேசிய பேரவையின் துணைத் தலைவர் கூறுகையில், பெரிய நாடான சீனா வறுமை ஒழிப்பில் வெற்றி பெற்றுள்ளது. உலகளவிலும் நடைபெற்று வரும் ஆட்சிமுறைக்கு இது சிறந்த முன்மாதிரியாகும். இத்தகைய சாதனையைச் சீனா எப்படி நனவாக்கியது என்பது, இதர நாடுகளின் கட்சிகள் மற்றும் அரசுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார்.

மேலும், சொந்த பொருளாதாரத்தை சீனா வளர்க்கும் அதேவேளை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவையும் வழங்கி, இதர நாடுகளின் வளர்ச்சிக்கு வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.