இந்தியாவில் வாகன விற்பனை எண்ணிக்கை அதிகரிப்பு
2023-03-12 17:14:03

இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் மார்ச் 10ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, பிப்ரவரியில் உள்நாட்டுப் பயணி வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 11 விழுக்காடு அதிகரித்து, 2 லட்சத்து 91 ஆயிரத்து 928ஐ எட்டியது.

மேலும், பிப்ரவரியில் இரு சக்கர வாகனங்களின் விற்பனையளவு 8 விழுக்காடு அதிகரித்து 11 லட்சத்து 29 ஆயிரத்து 661ஐ எட்டியது. மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையளவு 50 ஆயிரத்து 382 ஆகும் என்றும் அத்தரவுகள் தெரிவிக்கின்றன.