தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதிகளின் வரைவுத் தீரமானங்கள் மற்றும் முன்மொழிவுகள்
2023-03-12 16:55:52

14ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடரின் செயலகத்திலிருந்து கிடைத்த தகவலின்படி, மார்ச் 7ஆம் நாள் நண்பகல் 12 மணி வரை 271 வரைவுத் தீர்மானங்களும், மார்ச் 10ஆம் நாள் 12 மணி வரை 8000க்கும் மேற்பட்ட முன்மொழிவுகளும் இச்செயலகத்துக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன.

முன்களப் பணியாளர்கள், விவசாயிகள், தொழில் நுட்பப் பணியாளர்கள் உள்ளிட்ட அடிமட்ட பிரதிநிதிகள் முன்வைத்த முன்மொழிவுகள், மொத்த முன்மொழிவுகளில் சுமார் 50 விழுக்காடு வகிக்கின்றன. நாட்டின் புத்தாக்க முறைமையை மேம்படுத்துவது, எண்ணியல் சீனா கட்டுமானத்தை விரைவுபடுத்துவது, கிராமப்புற வளர்ச்சியை ஊக்குவிப்பது, வேளாண் துறையின் நவீனமயமாக்கத்தை விரைவுபடுத்துவது, மாசு கட்டுப்பாடு மர்றும் உயிரின நாகரிக கட்டுமானத்தை வலுப்படுத்து, அடிமட்ட நோய் தடுப்பு மற்றும் சுகாதார நிர்வாகத் திறனை உயர்த்துவது முதலியவற்றின் மீது இந்த முன்மொழிவுகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, செயலகத்தின் வரைவுத் தீர்மானப் பிரிவின் துணைத் தலைவர் கூறுகையில், இந்த வரைவுத் தீர்மானங்கள் மற்றும் முன்மொழிவுகள் பொது மக்களின் கருத்துக்களை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளன என்றார்.