நார்ட் ஸ்ட்ரீம் குழாய் வெடிப்பு பற்றி சிமோ ஹேஷ் அளித்த பேட்டி
2023-03-12 18:17:23

அமெரிக்க உளவுத் தகவல் வாரியமும், அமெரிக்க ராணுவ வட்டாரமும், நார்ட் ஸ்ட்ரீம் குழாயைச் சேதப்படுத்தின என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற புலனாய்வு செய்தியாளர் சிமோ ஹேஷ் பிப்ரவரி முற்பாதியில் தெரிவித்தார். அதற்குப் பிறகு மேலை நாடுகளின் முக்கிய செய்தி ஊடகங்கள் இது பற்றி எதையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவான குழு ஒன்று இவ்வெடிப்பை ஏற்படுத்தியது என்று மார்ச் 7ஆம் நாள் அமெரிக்காவின் நியூயர்க் டைம்ஸ், பிரிட்டனின் தேம்ஸ், ஜெர்மனியின் பல செய்தி ஊடகங்கள் ஆகியவை செய்திகள் வெளியிட்டன. இது குறித்து ஹேஷ் சீன ஊடகக் குழுமத்திடம் பேட்டியளித்த போது கூறுகையில், பொது மக்களின் கவனத்தை தவறான திசை நோக்கிச் செலுத்துவதை நோக்கமாக கொண்டு மேலை நாடுகள் இக்கருத்தை வெளியிட்டுள்ளன என்றும், நார்ட் ஸ்ட்ரீம் குழாயை வெடிக்கும் திறன், உக்ரைனுக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

ஜெர்மனி, ரஷியாவிடமிருந்து மலிவான இயற்கை எரிவாயுவை பெருமளவிலும் தொடர்ச்சியாகவும் வாங்க முடியும் என்னும் சூழல் இருந்தால், ஜெர்மனி ரஷியாவிடமிருந்து அந்நியப்படுத்தாது. இது பற்றி அமெரிக்கா கவலைப்படுகின்றது. நடப்பு அமெரிக்க அரசின் தூதாண்மை கொள்கை முட்டாள்தனமானது. அமெரிக்காவின் மேலாதிக்கம் தோல்வியடைந்துள்ளது. இதை நான் எதிர்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.