வெளிநாடுகளிலுள்ள பாகிஸ்தான் தொழிலாளர்கள் அனுப்பும் பணம் அதிகரிப்பு
2023-03-12 18:38:56

பிப்ரவரியில் வெளிநாடு வாழ் பாகிஸ்தான் தொழிலாளர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பிய பணம் ஜனவரியில் இருந்ததை விட 4.9 விழுக்காடு அதிகமாகும் என்று பாகிஸ்தான் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பிப்ரவரியில், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இப்பணம் முக்கியமாக வந்துள்ளது என்றும் இவ்வங்கி தெரிவித்துள்ளது.

தொழிலாளர்கள் அனுப்பிய பணம் பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வருகிறது. அதோடு, அந்நாட்டின் அந்நிய செலாவணி தொகையில் முக்கிய ஒரு பகுதி இதுவாகும்.