சீனாவில் காட்டு நிலப்பரப்பு அதிகரிப்பு
2023-03-12 18:18:14

மார்ச் 12ஆம் நாள், சீனாவின் 45ஆவது மரம் நடும் நாளாகும். சீன தேசிய பசுமைமயமாக்க ஆணையப் பணியகம் அதேநாள் 2022ஆம் ஆண்டு நாட்டின் பசுமைமயமாக்க நிலைமை பற்றிய அறிக்கையை வெளியிட்டது. அதன்படி, தற்போது சீனாவில் காட்டு நிலப்பரப்பு 23 கோடியே 10 இலட்சம் ஹெக்டராகும். காட்டு நிலப்பரப்பு விகிதம் 24.02 விழுக்காடாகும். புல்வெளியின் நிலப்பரப்பு, 26 கோடியே 50 இலட்சம் ஹெக்டராகும். புல்வெளியில் ஒட்டுமொத்த தாவர நிலப்பரப்பு விகிதம் 50.32 விழுக்காடாகும்.

மேலும், சீனாவின் பசுமைமயமாக்கம் தொடர்ச்சியாக ஆழமாகி வருவதோடு, பசுமைமயமாக்க தரமும் படிப்படியாக உயர்ந்து வருகின்றது. 2022ஆம் ஆண்டில் காடு மற்றும் புல்வெளிப் பாதுகாப்பு பணி நிறைய சாதனைகளை பெற்றுள்ளது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.