நாணய மாற்றுவிகிதத்தை நிலைநிறுத்த ஆப்கான் மத்திய வங்கியின் முயற்சி
2023-03-13 19:49:02

தேசிய நாணயமான ஆப்கானியின் மாற்று விகிதத்தை நிலைப்படுத்தும் விதம், ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கி திங்கள்கிழமை ஏலத்தின் மூலம் 1 கோடியே 60 லட்சம் அமெரிக்க டாலரை விற்பனை செய்ததாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டு நாணயங்களுக்கு, குறிப்பாக அமெரிக்க டாலருக்கு நிகரான ஆப்கானியின் மதிப்பு கடந்த சில மாதங்களில் குறைந்து வருகிறது. 1 அமெரிக்க டாலருக்கு நிகரான ஆப்கானியின் மாற்று விகிதம், கடந்த வாரத்தில் 88 இலிருந்து 88.5 ஆக உயர்ந்தது.

மதிப்பிறக்கத்தைத் தடுக்கும் பொருட்டு, கடந்த மாதத்தில், ஆப்கான் மத்திய வங்கி நாட்டின் அன்னிய செலாவணிச் சந்தையில் பல பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க டாலரைச் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.