பிப்ரவரியில் சுற்றுலாத்துறையின் மூலம் 1699 லட்சம் அமெரிக்க டாலர் இலங்கை ஈட்டியுள்ளது!
2023-03-13 20:53:37

பிப்ரவரி மாதத்தில் சுற்றுலாத்துறையின் மூலம், 16 கோடியே 99 லட்சம் அமெரிக்க டாலரை ஈட்டியுள்ளதாக, அந்நாட்டின் சுற்றுலா அமைச்சர் திங்கட்கிழமை தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், 210,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

சுற்றுலா வளர்ச்சி ஆணையத்தின் தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் ரஷ்யா, இந்தியா மற்றும் ஜெர்மனி ஆகியவை, இலங்கைக்கு வருகை தரும் பயணிகளின் முதல் மூன்று மூலச் சந்தைகளாக இருந்தன.

2023ஆம் ஆண்டில் சுமார் 15 லட்சம்  சுற்றுலாப் பயணிகளையும், 2024ஆம் ஆண்டில் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்ப்பதை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.