நேபாளத்தின் புதிய அரசுத் தலைவர் பதவி ஏற்பு
2023-03-13 19:42:34

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நேபாள அரசுத் தலைவர் ராம் சந்திர பௌடல் தனது 5 ஆண்டு பதவிக்காலத்தை தொடங்குவதற்காக மார்ச் 13ஆம் நாள் உறுதிமொழி கூறி பதவி ஏற்றார்.

தற்காலிக தலைமை நீதிபதி ஹரி கிருஷ்ண கார்க்கி, ராம் சந்திர பௌடலுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

78 வயதான ராம் சந்திர பௌடல் மார்ச் 9ஆம் நாள் நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிப் பெற்று, நேபாளத்தின் 3வது அரசுத் தலைவராக விளங்கினார். நேபாளம் 2008ஆம் ஆண்டு குடியரசாக மாறியது குறிப்பிடத்தக்கது.