சீனத் தனியார் துறைப் பொருளாதாரத்தில் வளர்ச்சி வாய்ப்பு அதிகம்
2023-03-13 14:43:46

சீனத் தனியார் துறைப் பொருளாதாரத்தின் வளர்ச்சி சூழல் தொடர்ந்து மேம்பட்டு வருகவதுடன், மேலும் அதிக வளர்ச்சிக்கான இடத்தையும் கொண்டுள்ளது. இதனால், சீனத் தனியார் துறைப் பொருளாதாரத்துக்கு பரந்த வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளனஎன்று சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 13ஆம் நாள் செய்தித்தொடர்பாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தனியார்துறைப் பொருளாதார வளர்ச்சி பற்றிய கட்சி மத்திய கமிட்டியின் கொள்கைகள் எப்போதும் மிகவும் தெளிவாக உள்ளன. புதிய தொடக்கப் புள்ளியில், சந்தை சார்ந்த, சட்ட அடிப்படையிலான மற்றும் உலகமயமாக்கல் ரீதியான வணிகச் சூழலை உருவாக்க வேண்டும் என்றும், தனியார் தொழில் நிறுவனங்களின் சொத்துரிமை மற்றும் தொழில் முனைவோரின் நலன்களை அரசு சட்டப்படி பாதுகாத்து, அவற்றஇன் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என்றும் தெரிவித்தார்.