சீன-அமெரிக்க உறவு பற்றி லீ ச்சியாங்கின் கருத்து
2023-03-13 14:50:13

சீன-அமெரிக்க உறவின் மீது பிரகாசமான நம்பிக்கை கொண்டுள்ளதாகச் சீனத் தலைமை அமைச்சர் லீ ச்சியாங் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டுறவு பற்றிய செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த அவர், சுற்றிவளைப்பு அல்லது கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகள் எந்த ஒரு நாட்டுக்கும் நன்மை தராது என்று சுட்டிக்காட்டினார்.

கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்காவில் சிலர் இரு நாட்டுறவின் இணைப்பு நீக்கம் என்ற கருத்தைப் பெரிதுபடுத்தி வருகின்றனர். எத்தனை பேர் இத்தகைய செயல்பாடுகளிலிருந்து நலன் பெறுவர் என்பது பற்றி தெரியாது. மாறாக, இரு நாடுகளும் எதிர் தரப்பின் வளர்ச்சியிலிருந்து நன்மை கிடைக்கும் என்று லீ ச்சியாங் தெரிவித்தார்.

வெளிநாட்டுத் திறப்பு சீனாவின் அடிப்படைக் கொள்கையாகும். வெளிப்புறச் சூழ்நிலை எப்படி மாறினாலும், சீனா இக்கொள்கையை உறுதியாக முன்னேற்றும் என்றும் அவர் வலியுறுத்தினார்.