சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் உலக அரசியல் கட்சிகளின் உச்சி மாநாடு
2023-03-13 14:54:31

சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் உலக அரசியல் கட்சிகளின் உச்சி மாநாடு 15ஆம் நாள் புதன்கிழமை காணொளி இணைப்பு மூலம் நடைபெறவுள்ளதாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹூ ச்டெளமிங் 13ஆம் நாள் தெரிவித்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், இம்மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுவார் என்று அவர் கூறினார்.

"நவீனமயமாக்கப் பாதை: அரசியல் கட்சிகளின் பொறுப்பு" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில், பல நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்புகளின் தலைவர்கள் ஒன்றுகூடி விவாதிக்க உள்ளனர்.