சீனப் பொருளாதார எதிர்காலம் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன்:சீனத் தலைமையமைச்சர்
2023-03-13 12:15:34

14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடர் மார்ச் 13ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் நிறைவுப் பெற்றதைத் தொடர்ந்து, தலைமையமைச்சர் லீச்சியாங் முதன்முறையாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களைச் சந்தித்து, கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

சீனப் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக அவர் பேசுகையில், காற்று மற்றும் அலைகளுக்கு எதிராக தைரியமாக இருக்கினோம் என்றும், சீனப் பொருளாதாரத்தின் எதிர்காலம் மீது நிறைய நம்பிக்கை கொண்டதாகவும் தெரிவித்தார்.

இவ்வாண்டில் சீனப் பொருளாதார அதிகரிப்பு இலக்கை 5விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணிகளை ஒருங்கிணைந்த்து கருத்தில் கொண்ட பின் இந்த இலக்கு உறுதிப்படுத்தப்பட்டது. இதை நனவாக்க, கூடுதல் முயற்சிகள் தேவைப்படுகிறன. ஒட்டுமொத்தக் கொள்கை, தேவைகளின் விரிவாக்கம், சீர்த்திருத்தம் மற்றும் புத்தாக்கம், இடர்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகிய 4 துறைகளை செல்வனே செய்வதன் அடிப்படையில், தொடர்ந்து பாடுபடுவோம் என்று லீ ச்சியாங் தெரிவித்தார்.