தவறான பாதையில் செல்லும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவுக்குசீனா வேண்டுகோள்
2023-03-14 19:19:37

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஒத்துழைப்புத் திட்டத்தை முன்னேற்றுவது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 14ஆம் நாள் கூறுகையில், இம்மூன்று நாடுகள் சர்வதேசச் சமூகத்தின் கவனத்தை முற்றிலும் பொருட்படுத்தாமல் புவிசார் சுயநலனுக்கு தவறான மற்றும் ஆபத்தான பாதையில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அவற்றின் பனிப்போர் சிந்தனை, படைக்கலப்போட்டியைத் தூண்டிவிடும் அதேவேளை, சர்வதேச அணு ஆயுதப் பரவல் தடுப்பு முறைமையையும், பிரதேச அமைதி மற்றும் நிலைத்தன்மையையும் சீர்குலைக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

இம்மூன்று நாடுகள் சர்வதேசச் சமூகத்தின் குரலுக்குச் செவிசாய்ந்து, பழைய பனிப்போர் சிந்தனை மற்றும் புவிசார் அரசியல் கருத்தைக் கைவிட்டு, நடைமுறையில் சர்வதேச பொறுப்புகளை ஏற்குமாறு சீனா வேண்டுகோள் விடுக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.