ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் வழங்கும் திட்டம்
2023-03-14 10:59:03

அமெரிக்க அரசுத் தலைவர் பைடென், ஆஸ்திரேலிய தலைமையமைச்சர் அல்பானிஸ், பிரிட்டனின் தலைமையமைச்சர் சுனக் ஆகியோர் கலிபோர்னிய மாநிலத்தின் சான் டியாகோவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் 13ஆம் நாள் சந்தித்துப்பேசினர். கூறப்படும் முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டு குறித்து ஆஸ்திரேலியாவுக்கு அவர்கள் ஆலோசித்தனர். மேலும், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இப்பேச்சுவார்த்தைக்குப் பிறகு முத்தரப்பு கூட்டறிக்கையின் படி, மூன்று அமெரிக்க விர்ஜீனியா நிலை நீர்மூழ்கி கப்பல்களை ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்கா விற்பனை செய்யவுள்ளது. இது, சுமார் 2030 ஆண்டின் முற்பகுதியில் நிறைவேற்றப்படும். பின்னர் மேலும் 2 கப்பல்கள் விற்கப்படக் கூடும்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஒத்துழைப்பின் மூலம் புதிய ரக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க மூன்று நாடுகளும் திட்டமிட்டுள்ளன. 2055ஆம் ஆண்டுக்குள் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குச் சுமார் 24 ஆயிரத்து 500 கோடி அரமெரிக்க டாலர் தேவை.