சீனாவுக்கான விசா மற்றும் எல்லை நுழைவு கொள்கை மாற்றம்
2023-03-14 16:21:25

தொற்று நோய் தடுப்பையும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியையும் சிறந்த முறையில் ஒருங்கிணைத்து, உள்நாட்டவர் மற்றும் வெளிநாட்டவர்களின் பரிமாற்றத்துக்கு வசதியளிக்கும் விதம், 2023ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் நாள் முதல் விசா மற்றும் எல்லை நுழைவுக் கொள்கையைச் சரிப்படுத்த, சீனத் தேசிய குடியேற்ற நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

2020ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் நாளுக்கு முன் வெளியிடப்பட்டு செல்லுபடியாகும் காலத்துக்குள்ளான விசாவைக் கொண்டு சீனாவுக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு எல்லை நுழைவு அனுமதி அளிக்கப்படும்.

ஹாய்நான் நுழைவு, ஷாங்காய் சொகுசு கப்பல், ஹாங்காங் மற்றும் மக்கௌவிலுள்ள வெளிநாட்டவர்கள் குழுவாக குவாங்டோங் மாநிலத்துக்குள் நுழைவது, ஆசியான் சுற்றுலாப் பயணக் குழு குவாங்சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் குய்லின் நகருக்குள் நுழைவது ஆகியவற்றுக்கான விசா விலக்கு கொள்கை மீட்கப்பட உள்ளது.