உயர் தர வளர்ச்சியைச் சீனா முன்னேற்றுவது உலகத்துக்கு நன்மை புரியும்
2023-03-14 17:32:44

14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடரின் நிறைவுக் கூட்டத்தில், உயர் தர வளர்ச்சியைச் சீனா உறுதியாக முன்னேற்றும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உரை நிகழ்த்திய போது தெரிவித்தார். இது குறித்து சர்வதேச பிரமுகர்கள் கூறுகையில், உயர் தர வளர்ச்சியைச் சீனா முன்னேற்றுவது, உலக ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கும் என்றார்.

சாம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக்கான கூட்டு ஆய்வு மைய இயக்குநர் சாண்டர் இங்கிலாந்து கூறுகையில், சீனா மற்றும் உலகத்துக்கு இது ஒரு நல்ல தகவல். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய உயர் தர வளர்ச்சித் திட்டப்பணிகள் பல்வேறு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத்தை முன்னேற்றும் அதேவேளையில், ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட வளரும் நாடுகள் இதிலிருந்து நன்மை பெற்றுள்ளன என்றார்.

மேலும், அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் உண்மையான பலதரப்புவாதத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

இது குறித்து ஐரோப்பிய ஒன்றியச் செய்தியாளர்களின் பல்லூடகக் குழுமத்தின் தலைமைப் பதிப்பாசிரியர் கொலின் ஸ்டீவன்ஸ் கூறுகையில், ஐரோப்பாவின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளிகளில் ஒன்றாகவும், ஐ.நாவின் மிக முக்கிய உறுப்பு நாடுகளில் ஒன்றாகவும் சீனா திகழ்கிறது. சீனாவுடன் மேலும் செவ்வனே ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, அமைதி வளர்ச்சி பற்றிய கருத்தின் மூலம் நன்மை பெற வேண்டும் என்றார்.