சீனக் கூட்டதொடரில் உலகிற்கு ஆக்கப்பூர்வ சமிக்ஞை
2023-03-14 14:20:00

மார்ச் 13ஆம் நாள் பெய்ஜிங்கில் நிறைவு வடைந்த 14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடர் உலக வளர்ச்சிக்கு நலன் தருவதாக அமைந்தது. இதில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உரைநிகழ்த்தியபோது, வல்லரசு ஆக்கப்பணி மற்றும் தேசிய மறுமலர்ச்சியை நனவாக்கும் விதமாக, மன உறுதியுடன் தரமான வளர்ச்சியை முன்னேற்றி, மனிதகுலத்தின் பொது எதிர்காலத்தை உருவாக்கி, உயர்ந்த நிலையில் வெளிநாட்டு திறப்பை விரிவாக்க பாடுபடுவோம் என்று தெரிவித்தார். சீனாவின் எதிர்காலத் திட்டமானது, சொந்த திசையை முன்னேறிச் செல்வது மட்டுமல்லாமல், உலகிற்கு நலனையும் தரும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இக்கூட்டத்தொடரில், சீனப் பாணிநவீனமயமாக்க வளர்ச்சி என்பது மிகவும் கவனத்தை ஈர்த்தமுக்கிய வாசகமாகும். இந்த இலக்கை நனவாக்குவதற்காக, தரமிக்க வளர்ச்சி, தரமான வெளிநாட்டு திறப்பு ஆகிய இரண்டும் முக்கியப் பங்காற்றி வருகின்றன.

சமீப ஆண்டுகளில், சீனாவின் தரமிக்க வளர்ச்சியில் தெளிவான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் சீனாவின் உயர் தொழில் நுட்பம், உயர் கூடுதல் மதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ரக உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி விரைவாக அதிகரித்தது. இதில், மின்னாற்றல் வாகனங்கள் மற்றும் ஒளிமின்னழுத்தத் தயாரிப்புகளின் ஏற்றுமதி அளவுகள் கடந்த ஆண்டை விட முறையே 131.8விழுக்காடாகவும் 67.8விழுக்காடாகவும் அதிகரித்தன.

தவிர, சீனாவின் வளர்ச்சி உலகிற்கு நலன்கள் தரும் அதேவேளையில், உலகிலிருந்து பிரிக்க முடியாது என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு, சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பு மேற்கொள்ளப்பட்ட 45ஆண்டு நிறைவாகும். பசிபிக் கடந்த விரிவான, முன்னேற்றக் கூட்டுறவு உடன்படிக்கை உள்ளிட்ட உயர் வரையறை வர்த்தக மற்றும் பொருளாதாரா உடன்படிக்கைகளில் சேரும் வகையில், ஆக்கப்பூர்வமாக செயல்படுவோம் என்றும், தொடர்புடைய விதிகள் மற்றும் நிர்வாக வரையறைகளின்படி அமைப்பு முறை ரீதியான திறப்பை நிலையாக முன்னேற்றுவோம் என்றும் அரசுப்பணியறிக்கையில் கூறப்பட்டுள்ளது.