உலக பாதுகாப்பு முன்மொழிவின் வெற்றிகரமான நடைமுறை
2023-03-14 18:21:39

14ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில்,

பெய்ஜிங்கில் நடத்தப்பட்ட சாவ்தி அரேபிய-ஈரான் பேச்சுவார்த்தை, உலக பாதுகாப்பு முன்மொழிவை நடைமுறைப்படுத்திய வெற்றிகரமான நடவடிக்கையாகும் என்றார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினர் வாங் யீ கூறியதைப் போன்று, பேச்சுவார்த்தையின் வெற்றியாகவும் அமைதியின் வெற்றியாகவும் இது திகழ்கின்றது. நிரந்தர அமைதி, இப்பிரதேச நாடுகளின் பொது விருப்பமாகும். சுய நிர்ணய நெடுநோக்கு மற்றும் ஒற்றுமையுடன் ஒத்துழைப்பு, சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாகும் என்பதை இது வெளிக்காட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.