ஜனநாயத்துக்கு எதிரான அமெரிக்காவின் உச்சிமாநாடு
2023-03-15 17:38:31

அமெரிக்கா நடத்த உள்ள 2ஆவது ஜனநாயக உச்சிமாநாடு குறித்த கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 15ஆம் நாள் பதிலளிக்கையில், அமெரிக்கா நடத்தும் இந்த உச்சிமாநாடு ஜனநாயத்துக்குப் புறம்பானது என்று குறிப்பிட்டார்.

ஓராண்டுக்கு முன் ஜனநாயகத்தின் பேரில் ஜனநாயக உச்சிமாநாட்டை அமெரிக்கா நடத்தியது. அப்போது சித்தாந்தத்துடன் வரையறையை வகுத்த அது, உலகளவில் பிளவை ஏற்படுத்தி, அதன் போலியான ஜனநாயகம் மற்றும் உண்மையான மேலாதிக்கத்தை வெளிப்படுத்தியது. இது, பல நாடுகளின் விமர்சனம் மற்றும் எதிர்ப்புக்குள்ளானது. ஆய்வு ஒன்றின்படி, அமெரிக்கர்களில் 20 விழுக்காட்டினர் மட்டும் அமெரிக்க அரசின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். அந்நாட்டின் ஜனநாயகம் சொந்த மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாத நிலையில், மற்ற நாடுகளின் ஜனநாயகம் பற்றி விமர்சிக்க அதற்கு தகுதி இல்லை என்று வாங் வென்பின் தெரிவித்தார்.