சீனாவுடன் வர்த்தக ஒத்துழைப்பு:நேபாளத் தலைமையமைச்சர்
2023-03-15 11:38:38

நேபாளத் தலைநகர் காத்மாண்டில் 14ஆம் நாள் நடைபெற்ற 2023ஆம் ஆண்டு சீன-நேபாள முதலீடு, பொருளாதாரம் மற்றும் வர்த்தகக் கருத்தரங்கில் அந்நாட்டுத் தலைமையமைச்சர் பிரசண்டா கூறுகையில், சீனாவுடன் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தி, அதிகமான சீன முதலீட்டை ஈர்த்து, நேபாளத்தின் வளர்ச்சி இலக்குகளை அடைய முயற்சிப்போம் என்றார்.

சீனா முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் முன்மொழிவிலும் உலக வளர்ச்சி முன்மொழிவிலும் நேபாளம் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுப்பதை வரவேற்கின்றோம் என்று நேபாளத்துக்கான சீன தூதர் சென் சோங் உரையில் தெரிவித்தார். தூய எரிசக்தி, மின் வாகனங்கள் முதலிய புதிய வளர்ச்சித் துறைகளில் சீனாவும் நேபாளமும் கூட்டாகப் புதிய உள்ளாற்றலை வளர்க்க வேண்டும். நேபாளத்தின் சொந்த வளர்ச்சியை நனவாக்குவதற்கு அவை மிகவும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.