சிபிசிக்கும் உலக அரசியல் கட்சிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் ஷி ச்சின்பிங் பங்கேற்பு
2023-03-15 20:46:53

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் உலக அரசியல் கட்சிகளின் உயர்நிலை பேச்சுவார்த்தை மார்ச் 15ஆம் நாளிரவு தொடங்கியது. நவீனமயமாக்கத்துக்குச் செல்லும் பாதை: அரசியல் கட்சிகளின் பொறுப்பு என்பது காணொளி வழியாக நடத்தப்படும் நடப்பு பேச்சுவார்த்தையின் தலைப்பாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் இப்பேச்சுவார்த்தையின் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், மனிதரின் சுதந்திரமான பன்முக வளர்ச்சியை நனவாக்குவது நவீனமயமாக்கத்தின் இலக்காகும். அருமையான வாழ்க்கை மீதான பொது மக்களின் எதிர்பார்ப்பை அரசியல் கட்சிகள் குறிவைத்து, நாகரிக முன்னேற்றம் மீதான மக்களின் ஆர்வத்தின்படி, பொருட்களின் செழுமை, தூய்மையான அரசியல், அமைதியான சமூகம், சிறந்த சுற்றுச்சூழல் உள்ளிட்டவற்றை நனவாக்க வேண்டும். நவீனமயமாக்கத்தின் மூலம் பொது மக்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்து, மனிதகுலத்தின் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.