கருங்கடல் துறைமுக வேளாண் பொருட்கள் போக்குவரத்து ஒப்பந்தம் நீட்டிப்பு
2023-03-15 15:11:10

ரஷியாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட கருங்கடல் உணவு ஒப்பந்தம் மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், அனைத்து ஒத்துழைப்பு கூட்டாளி நாடுகளும் ரஷியாவுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றம் நிலைமையில் இந்நீடிப்பு நடைமுறைக்கு வர தொடங்கியது என்றும் ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் க்ருஷ்கோ 14ஆம் நாள் தெரிவித்ததாக அந்நாட்டு ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், வேளாண் பொருட்களை உலக சந்தைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க ரஷியா பாடுபடும் என்றும் க்ருஷ்கோ கூறினார்.

இந்த ஒப்பந்தத்தை ரஷியா நீட்டித்துள்ளதற்கு உக்ரைன் விமர்சனம் செய்துள்ளதாக ஏ எஃப்பி எனும் பிரான்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது முதற்கட்ட ஒப்பந்தத்துக்கு அறைகூவலாகக் கருதப்பட்டுள்ளது.

இவ்வொப்பந்தம் குறைந்தது மேலும் 120 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று உக்ரைன் உள்கட்டமைப்பு துறை அமைச்சர் அலெக்சாண்டர் குப்ரகோவ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கருங்கடல் துறைமுக வேளாண் பொருட்கள் போக்குவரத்து ஒப்பந்தத்தின் கீழ், தற்போது 2 கோடியே 40 இலட்சம் டன் உணவுப் பொருட்கள் தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.