அணு சக்தி நீர்மூழ்கி கப்பல் ஒத்துழைப்புத் திட்டம்:பண்டோராவின் பெட்டி
2023-03-15 15:25:53

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளின் தலைவர்கள் மார்ச் 13ஆம் நாள் சந்திப்பு நடத்திய பின், ஆஸ்திரேலியாவுக்கு அணு சக்தி நீர்மூழ்கி கப்பலை வழங்கும் திட்டம் வெளியிடப்பட்டது. அதற்கு முன் சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் வியன்னாவில் நடத்திய மார்ச் மாத செயற்கை குழுக் கூட்டத்தில், மேற்கூறிய மூன்று தரப்புகளின் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்புத் திட்டம் குறித்து அரசுகளுக்கிடையேயான பரிசீலனை மூலம் விவாதிக்கப்பட்டது. பல நாடுகள் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், முத்தரப்பானது சர்வதேச சமூகத்தின் கவனத்தைப் பொருட்படுத்தாமல் திட்டத்தை வெளியிட்டது, தன்னிச்சையான நடவடிக்கை மூலம் பலதரப்பு ரீதியான பொது கருத்தை எதிர்க்கும் செயலாகும். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஆசிய-பசிபிக் பிராந்திய அமைதி மற்றும் நிதானத்தைச் சீர்குலைப்பது ஐயமில்லை. அதே சமயத்தில், இது சர்வதேச அணு ஆயுதப் பரவல் தடுப்பு அமைப்புமுறைக்கு அச்சுறுதலாக அமைந்து, இராணுவப் போட்டியை தீவிரமாக்கும். கிரேக்கத் தொன்மவியலில் குறிப்பிட்ட பண்டோராவின் பெட்டி திறக்கப்பட்டபோது அனைத்து தீயவைகளும் வெளியேறியது போல், இது கற்பனை செய்ய முடியாத பாதிப்பை விளைவிக்கும்.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய மூன்றும், அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ள நாடுகளில் உள்ளன. ஆனால், இவ்வுடன்படிக்கைக்கு மாறாக அவை செயல்படுகின்றன.

அவை சிறிய குழு மூலம் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இராணுவ தந்திரங்களைப் பயன்படுத்தி, நேட்டோ மாதிரியை இங்கு செயல்படுத்த முயன்று வருகின்றன. இதற்கு பிராந்திய நாடுகள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மூன்று நாடுகள் அணு சக்தி நீர்மூழ்கி கப்பல் ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கு முக்கியக் காரணம், பொருளாதார காரணியும் உள்ளது. 24,500கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒத்துழைப்பு மூலம், அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் இராணுவத் தயாரிப்பு தொழில் நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டலாம். மேலும், அடுத்த 30ஆண்டுகளுக்குள் ஆஸ்திரேலியாவில் சுமார் 20 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அந்நாட்டு தலைமையமைச்சர் அல்பானீஸ் தெரிவித்தார்.