அமெரிக்க வங்கிகள் திவாலானதன் பாதிப்புகள்
2023-03-15 18:44:09

3 நாட்களுக்குள் அமெரிக்காவின் 2 வங்கிகள் திவாலான சம்பவம் காரணமாக, ஐரோப்பிய மத்திய வங்கி தொடர்ந்து 50 அடிப்படை புள்ளிகளுடன் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் திட்டம் நடப்பு வார வட்டி விகித கூட்டத்தில் மேலும் பெரும் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்று தகவல் தெரிந்தவரின் கூற்றை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பொருளாசாரச் சூழ்நிலை மாறியுள்ளதால், மேலும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று தகவல் தெரிந்தவர் கூறினார்.

மேலும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் அதிகரித்து, அந்நாட்டின் வங்கி முறைமை மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியது, இவ்விரு வங்கிகள் திவாலானதற்குக் காரணமாகும் என்று பொதுவாகக் கருதப்படுகிறது.