சீனாவின் ஷியான்-19 செயற்கைக் கோள் ஏவப்பட்டது
2023-03-15 20:44:29

பெய்ஜிங் நேரப்படி மார்ச் 15ஆம் நாளிரவு 7:41 மணி அளவில், சீனாவின் ஷியான்-19 செயற்கைக் கோள் ஜியூச்சுவான் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து லாங்மார்ச்-11 ஏவூர்தியின் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இச்செயற்கைக் கோள் திட்டமிட்ட பாதையில் தடையின்றி நுழைந்தது. நாட்டின் நிலவள ஆய்வு, நகரக் கட்டுமான திட்ட வரைவு, பேரிடர் தடுப்பு உள்ளிட்ட துறைகளில் இச்செயற்கைக் கோள் பயன்படுத்தப்படும்.