ஒரே சீனா என்ற கோட்பாடு சீனாவுடனான உறவின் அடிப்படை
2023-03-15 17:15:28

சீனாவுடன் தூதாண்மையுறவை அதிகாரப்பூர்வமாக நிறுவ விரும்புவதாக ஹோண்டுராஸ் அரசுத் தலைவர் தெரிவித்தார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் 15ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

உலகில் 181 நாடுகள் ஒரே சீனா என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சீனாவுடன் தூதாண்மையுறவை நிறுவியுள்ளன. சீனாவுடன் தூதாண்மையுறவை நிறுவுவது, வரலாற்று வளர்ச்சிப் போக்கிற்கும் கால ஓட்டத்துக்கும் பொருந்திய சரியான தேர்வாகும் என்பதை இது நிரூபித்துள்ளது. ஒரே சீனா என்ற கோட்பாட்டில், ஹோண்டுராஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் தூதாண்மையுறவை நிறுவ சீனா விரும்புகின்றது என்றார்.