அமெரிக்க பொருளாதார கட்டமைப்பு பிரச்சினையை அம்பலப்படுத்திய வங்கி நெருக்கடி
2023-03-16 17:17:04

அமெரிக்காவின் சிலிக்கன் வேல்லி வங்கி, சிக்னேச்சர் வங்கி அடுத்தடுத்து மூடப்பட்ட சம்பவம் சந்தை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சீன ரென்மின் பல்கலைக்கழகத்தின் நிதி ஆய்வகத்தின் உயர்நிலை ஆய்வாளர் ஜியா ஜின் கூறுகையில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்ததால், அந்நாட்டின் பல வங்கிகள் நொடிப்பு நிலையில் சிக்கிக் கொண்டுள்ளன. அமெரிக்க வங்கித் துறையின் வலுவற்ற நிலையை இது வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் இத்தகைய கட்டமைப்பு சார் பிரச்சினை இனிமேல் வெளி வரத் தொடங்க வாய்ப்புண்டு என்று சுட்டிக்காட்டினார்.