ஏமன் சூழ்நிலை பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2023-03-16 17:22:10

ஏமன் பிரச்சினை பற்றிய வெளிப்படை கூட்டத்தை ஐ.நா பாதுகாப்பவை மார்ச் 15ஆம் நாள் நடத்தியது. ஐ.நாவுக்கான சீனத் துணை நிரந்தர பிரதிநிதி கெங் ஷுவாங் இதில் கூறுகையில், சௌதி அரேபியா மற்றும் ஈரானின் பிரதிநிதிக் குழுக்கள் பெய்ஜிங்கில் நடத்திய பேச்சுவார்த்தையின் சாதனைகள், ஏமன் சூழ்நிலையின் மேம்பாட்டுக்குச் சாதகமான சூழ்நிலையை வழங்கும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும், தற்போது ஏமனில் பாதுகாப்பு நிலைமை பலவீனமாக உள்ளது. ஏமனுக்கான மனித நேய உதவி மற்றும் அதன் வளர்ச்சிக்கான ஆதரவை சர்வதேசச் சமூகம் அதிகரிக்க வேண்டும் என்றும், ஐ.நாவின் மனித நேய உதவியின் மீதான நியாயமற்ற கட்டுபாட்டுகளைக் குறிப்பிட்ட தரப்புகள் நீக்க வேண்டும் என்றும் சீனா வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.